Skip to main content

தினசரி ராசிபலன்- 19.05.2022

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

kadagam

கடகம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

5

சிம்மம்
இன்று பணவரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் அலைச்சலுக்கேற்ப அனுகூலப்பலன் கிட்டும்.

kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

thulam

துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

viruchagam

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

danush

தனுசு
இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

magaram

மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். எதிலும் நிதானம் தேவை.

kumbam

கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சாதகமான பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

meenam

மீனம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.