மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்று வருடத்திற்கு நான்கு முறை விண்டோஸ் 10 தனது மென்பொருளை (OS) அப்டேட் செய்ய தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்திவருகிறது. அதன் அடிப்படையில் 2018 அக்டோபர் மாதத்திற்கான நான்காவது காலாண்டு அப்டேட் செய்ய அறிவுறுத்தியது. இம்முறை அவ்வாறு செயும்போது வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தரவுகளை எல்லாம் இழக்க நேரிட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து தற்போதைக்கு விண்டோஸ் 10 அப்டேட்டை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. மேலும் அந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மூன்றாம் காலாண்டு மென்பொருளையே உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக வாடிக்கையாளர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களிலும் செல்ஃபோன்களிலும் ஆட்டோமேட்டிக் அப்டேட் வசதியை நிறுத்திவைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒரேவேளை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே நான்காம் காலாண்டுக்கான அப்டேட் செய்திருந்தால் மீண்டும் அவர்கள் பழைய விண்டோஸ் 10 மூன்றாவது காலாண்டு மென்பொருளையே உபயோகிக்குமாறும் அதற்கு வாடிக்கையாளர்கள் செட்டிங்ஸ் -> அப்டேட் & செக்யூரிட்டி -> ரிக்கவரி சென்று அதில் உள்ள பழைய மென்பொருளை ஓகே செய்து அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.