ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், கொல்லப்பட்டார். டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு ஒரே நாளில் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் இன்றும் இந்த விலையேற்றம் தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் விமான படையினர் இன்று ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க விமானம் பறக்க தற்போது அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.