வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேட்பாளர் என அறிவித்துள்ளது திமுக தலைமை. வேட்பளாராக அறிவிக்கப்பட்டதும் கட்சி தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற கதிர்ஆனந்த், அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, சொந்த கட்சியினரின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துக்கொள்வது என தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
![vellore 17th lok sabha election dmk kadhir ananth nomination filled date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/cukyXIiYMy9Z7qWQJsnpFmL05-uxzdoJKoeQFkMsAe4/1562932551/sites/default/files/inline-images/26MARTHVAIKO.jpg)
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஜூலை 11 ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்ட நிலையில் திமுக வேட்பாளர் எப்போது வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளார் என பல தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து, இன்று திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தரப்பில் இருந்து அது தொடர்பாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் 17 ஆம் தேதி புதன்கிழமை அன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளார்கள்.