கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்
நம் எல்லாருடைய மவுனமும் கலையவேண்டிய நேரம் இது .கிராம சபைகளில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன் அதேபோல் கிராமசபை பற்றி அனைத்து கூட்டங்களிலும் வலியுறுத்தியும் வருகின்றேன்.
மக்கள் நீதி மய்யம் என்ன செய்யும் என்று பட்டியல் போடும் நேரம் இதுவல்ல ஆனால் யாருக்காக செய்யும் என்பதை ஆள் சுட்டிக்காட்ட என்னால் முடியும்என்றால் அது உங்களுக்கானதாக இருக்கும்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, நாட்டின் எதிர்காலத்திற்காக குறைகளை நீக்க திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தின் 17 பேர்கள் கொண்ட ஹார்டுவேட் குழு. அந்த குழுவிற்கு மக்களின் குறைகளை கேட்டு எடுத்துச்செல்லும் ஒருவனாக, தூதுவனாகவே நான் இருக்கிறேன்.
இது என்னுடைய கற்றல் தருணம், மக்களிடம் இருந்து கற்றுகொள்ளும் பயணம் இது, இதை செய்யப்போகிறோம் அதை செய்யப்போகிறோம் என்று மாருதட்டிக்கொள்ளும் பயணம் அல்ல ,விசில் ஆப் மூலம் உங்கள் குறைகளை தெரியப்படுத்துங்கள். அதுபோல் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் அனைவரும் விசில் செயலியை கண்டிப்பாக உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து மக்கள் தொண்றாற்றுங்கள். விசில் செயலி மக்கள் பிரச்னையை எனக்கு தெரியப்படுத்த உறுப்பினர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பு என பேசினார்.