Skip to main content

''அரசியல் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது''-ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Actor Vijay advises fans not to criticize political leaders

 

அரசியல் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என்ற அறிவுரையை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.

 

நடிகர் விஜய்யின் உத்தரவு குறித்து விஜய் மக்கள் இயக்க மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு பதவிகளில் உள்ளோர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக் கூடாது. யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் மக்கள் இயக்கத்தினர் விமர்சனம் செய்யக் கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதி பதிவிடவும் மீம்ஸ் போடவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சென்னை திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நேற்று நடிகர் விஜய்யும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டனர். திருமண விழாவில் எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட இருவரும் பரஸ்பரமாக கை கொடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் சந்தித்துக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தைப் பெற்றது. அதேபோல் வரும் 13ஆம் தேதி நடிகர் விஜயின் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்