திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளிடம் திமுக தலைமை பேசி வருகிறது. விரைவில் அந்தக் கட்சிகளுடனான உடன்பாடும் இன்று அல்லது நாளை முடிவுடைய உள்ளது.
இதனிடையே விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலையும் நடத்தி முடித்துள்ளது திமுக தலைமை. இந்தநிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளாராம். அந்த லிஸ்ட்டில் உள்ளவர்கள் அனைவரும் புதிய முகங்கள், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பரிந்துரைத்துள்ளாராம்.
இந்த லிஸ்ட்டில் உள்ள தொகுதிகளை அறிந்த திமுகவின் சீனியர்கள் குழப்பத்தில் உள்ளார்களாம். மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? அல்லது புது முகங்களுக்கு கொடுத்துவிட்டு, வேறு தொகுதியில் தங்களுக்கு சீட் கொடுப்பார்களா? என்ற டென்ஷனிலும் உள்ளார்களாம். கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பார் என்று ஜூனியர்கள் தரப்பும், சீனியர்களும் நம்பிக்கையில் உள்ளனர்.