டெல்லி உள்ள ஓக்லா பகுதியில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் செல்போனை பார்த்தவாறு சாலையில் நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக தப்பித்துள்ளனர். இவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

#WATCH Delhi: Two bike-borne snatchers snatch mobile phone of a woman journalist in Okhla area. (Source: CCTV footage) (23.09.2019) pic.twitter.com/TC8PAtC7kt
— ANI (@ANI) September 26, 2019
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் செல்போனை பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் காதல் ஜோடி திருட்டு பைக்கில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் நடந்து சென்ற பெண் பத்திரிக்கையாளரிடம் செல்போன் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.