
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பக்ரீத்தை ஒட்டி, ஆடு ஒன்று ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்றான பக்ரீத், நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநாளில், இறைவன் பெயரில் ஆடுகள் குர்பானி அளிக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக நாடு முழுவதும் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல முக்கிய நகரங்களில் இதற்காகச் சிறப்புச் சந்தைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கான்பூரின் தல்வார் மெஹல் ரயில் இணைப்பு பகுதியில் தற்காலிக சந்தை அமைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
இதில் பைஸ் கான் என்ற இளைஞரின் மூன்று ஆடுகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதுப் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தில்ருபா, குரு, ரங்கீலா எனப் பெயரிடப்பட்ட அந்த மூன்று ஆடுகள் ஏசி அறையிலேயே வைக்கப்பட்டு, முந்திரி, பேரீச்சை ஆகியவை உணவாகக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவையாகும். 135 கிலோ எடையுள்ள தில்ருபாவை சாமங்கஞ்சில் வசிக்கும் ஒருவர் ரூ.1,40,000 கொடுத்து வாங்கியுள்ளார். அதேபோல 150 கிலோ எடைகொண்ட ரங்கீலா ரூ.3.5 லட்சத்திற்கும், 110 கிலோ எடைகொண்ட குரு ரூ.1.30 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.