Skip to main content

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

tn

 

ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்க இன்று தமிழக அரசவை கூடவிருக்கிறது என்ற செய்தியை தொடர்ந்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தலைமை செயலகம் வந்துள்ளன நிலையில்  முதல்வர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கடந்த 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்ததிருந்தது.

 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, அதில்.. பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்தது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில்தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தலைமை செயலகம் வந்துள்ளன நிலையில்  முதல்வர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

சார்ந்த செய்திகள்