நீட் தேர்வு எழுதுவதற்கு மகனோடு சென்ற தந்தை கிருஷ்ணசாமி மரணமடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி சாலையில் உள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற கிருஷ்ணசாமி. அவர் தனது மகனை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு கடந்த 3ம் தேதி திருவாரூரில் இருந்து புறப்பட்டு சென்றார். நேற்று மகன் கஸ்தூரிமகாலிங்கத்தை தேர்வு மையத்தில் விட்டுவிட்டு வந்தவர் மயக்கமடைந்தநிலையில் இறந்து போனார்.
அவரது உடல் இரவு 12.30 க்கு விளக்குடிக்கு வந்தது. கிராமத்தினரும், பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரனம் அறிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின். கிருஷ்ணசாமியின் குடும்பத்தினரிடம் தொலைப்பேசாயில் ஆறுதல் கூறியதோடு, அவர்களின் குடும்பத்திற்கு உரிய நீதிக்கிடைக்க செய்வதாக உறுதி கூறியுள்ளார்.
கிருஷ்ணசாமியின் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திய கனிமொழி எம்,பி கூறுகையில், நீட் தேவினால் ஆண்டுதோறும் ஒருவரை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், பெற்றோர்களையும் மாணவர்களையும் இன்னலுக்கு உண்டாக்கும் நீர்தேர்வு தேவையா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். இந்த சம்பவத்திற்கு பிறகாவது மத்திய மாநில அரசுகள் சிபிஎஸ்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் திமுக நீட்டை எதிர்த்து தொடர்ந்து போராடும் என்றார்.
ஜி.கே.வாசன் கூறுகையில், மத்திய அரசு மாணவர்களின் உரிமைகளை மதிக்கவில்லை. மாநில அரசு மாணவர்களின் உரிமைகளை பெற்று தரவில்லை. மாணவர்களை தீவிரவாதிகள் போல சோதனை செய்தது கண்டனத்திற்குறியது. இதுபோன்ற சிரமங்களை இனியாவது மாணவர்களுக்கு கொடுக்காமல் மத்திய அரசும், மாநில அரசும் சிபிஎஸ்சியும் நிறுத்த வேண்டும். சிபிஎஸ்ஸியின் அலட்சிய போக்கும், முறையான திட்டமிடுதல் இல்லாததுமே இறப்பிற்கு காரணம், மாநில அரசு கொடுத்த நிதி போதாது, மாணவனின் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்றார்.
திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தவமணி கூறுகையில், மாணவன் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளை பள்ளித்துறை செய்யும் என்றார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி,ராமகிருஷ்ண, நீட் தேர்வு எழுதும் சட்டத்தை கொண்டுவந்த மைய அரசு அதை முறையாக செயல்படுத்தவில்லை, நீட்தேர்வு கொண்டுவந்த மைய அரசு அனைவருக்கும் தேர்வு மையம் ஏற்படுத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழக அரசு அதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், உயிரிழப்பிற்கு இவர்கள் பொருப்பு. மாநில உயர்கல்வித்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும், திருவாரூரிலேயே மத்திய பல்கலைக்கழக கிளை உள்ளது, தற்போது விடுமுறை என்பதால் இங்கேயே தேர்வு எழுத வைத்திருக்கலாம்." என்றார்.