
முதலமைச்சர் அறை முன்பு போராட்டம் நடத்திய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றி கைது செய்தனர்.
முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். முதலமைச்சர் அறை முன் 20க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பினர். இதையடுத்து போராட்டம் நடத்திய ஸ்டாலினை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். பின்பு, தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.