'தடம்' படத்தின் வெற்றியை அடுத்து அருண் விஜய் நடிப்பில் 'மாஃபியா' வெளியானது. இதன்பின் 'அக்னிச் சிறகுகள்', 'பாக்ஸர்' உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதனிடையே என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்கும் 'சினம்' படத்தில் நடிக்க தொடங்கினார். கடந்த இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு முழுவதும் முடிக்கப்பட்டுவிட்டது. மார்ச் மாதத்திலிருந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்படுவதாக இருந்தபோது கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டது.
அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். அருண் விஜயின் தந்தை விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்துக்கு ஷபீர் இசையமைக்கிறார்.
திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் இப்படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் லுக்கில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.