Skip to main content

இறந்த தந்தையின் புகைப்படத்தோடு திருமண விழாவில் ரன்பீர் கபூர்; கண் கலங்கும் ரசிகர்கள்

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் (14.4.2022) இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்களின் திருமண நிகழ்வுகளில் கரண் ஜோகர், அர்ஜுன் கபூர், சோயா அக்தர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

கடந்த 2020 ஆம் ஆண்டு ரன்பீர்  கபூர் தந்தை ரிஷி கபூர் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இன்று நடைபெற்ற மெஹந்தி நிகழ்வில் தனது தந்தையின் புகைப்படத்துடன் ரன்பீர் கபூர் கலந்துகொண்டுள்ளார். திருமணத்தில் தனது தந்தையை நினைவு கூறும் வகையில் ரன்பீர் வைத்திருந்த புகைப்படம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - விஜய்யின் படத்திற்கு டாப் ஹீரோயின்கள் பரிந்துரை

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
vijay 69 heroine update

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால், அவருக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினசரி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடப்பதாக கூறப்படுகிறது. 

vijay 69 heroine update

இப்படத்தை அடுத்து விஜய்யின் கடைசி படமாக உருவாகும் அவரது 69ஆவது படத்தை அ.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் உலா வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா, சமந்தா, மிருனால் தாக்கூர் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகிய நான்கு நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vijay 69 heroine update

இதனிடையே தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், தனது 69வது படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.