Skip to main content

கடலில் எழுந்த விசித்திர ஒளி... காரணம் என்ன??? (வீடியோ)

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
dolphin


 


இங்லாந்து, ஜிப்ரால்டர் கடற்பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. அந்த கடல் வழியாக படகில் சென்றவர்கள் இதை படம்பிடித்துள்ளனர். ஜிப்ரால்டரில் இருந்து 120 நாட்டிகல் மைல் தொலைவில்தான் இந்த அரிய காட்சி நடந்துள்ளது. நடுக்கடலில் டால்பின்கள், நீல நிற ஒளியை உமிழ்ந்து விளையாடியது போன்ற அரிய காட்சிதான் அது. சுமார் அரை மணி நேரம் இதுபோன்று விளையாடியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஒளி டால்ஃபின்களிலிருந்து வந்த ஒளி என்றும் தெரிவிக்கின்றனர். நிறையபேர் இது என்ன என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர்.
 

மாலத்தீவுகளின் கடல்களில் தண்ணீர் கலங்கும்போது ஒரு வித நீல ஒளி ஏற்படும். இந்த ஒளிக்கு "உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி" (bioluminescence) என்று பெயர். "பிளூரெஸ்ஸ்ண்ட் ப்ளங்க்டோன்" என்ற  கடல் உயிரி அதிகளவில் காணப்படுவதுதான் இதற்கு காரணம். கடல் அலைகளாலும், நீரை கலக்குவதாலும் இந்த உயிரிக்கு தொந்தரவு ஏற்படுவதால் இது நீல நிறமாக மாறுகிறது. இரவில் இது நன்றாக தெரியும். ஒருவேளை ஜிப்ரால்டர் கடற்பகுதியும் இப்படியான அமைப்பைக் கொண்டது. டால்பின்கள் அதில் நீந்தி சென்றபோது இப்படியான ஒளி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த வீடியோவின் கீழ்பகுதியில் தண்ணீர் அதிகமாக கலங்குகிறது. இது  அந்த படகு செல்வதால் அந்த கடல்நீர் கலங்கி இந்த ஒளி ஏற்பட்டிருக்கிறது. 

 

 

 

 

Next Story

கடலில் கலந்த எண்ணெயில் கலந்திருப்பது என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
'Phenol, grease in Ennur Estuary'-Pollution Control Board releases shock report

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மெரினா கடற்கரை வரை தற்பொழுது அந்த எண்ணெய் படிவுகள் படர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மெரினா மற்றும் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் கால்களை வைத்து விளையாடியவர்களின் பாதத்தில் எண்ணெய் துளிகள் ஒட்டிக்கொண்டது. இது தொடர்பாக வீடியோக்கள் எடுத்த சுற்றுலா பயணிகள், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். காலில் ஒட்டிய அந்த எண்ணெய் படலம் எவ்வளவுதான் கழுவினாலும் போகவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணுரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெயாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Next Story

எண்ணெய் படர்ந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்; எண்ணூரில் அதிகாரிகள் ஆய்வு

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Fishermen affected by oil spills; Investigation by officials in Ennore

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் படர்ந்து இருக்கிறது. இந்நிலையில்  8 நாட்களாக அங்கு படர்ந்து இருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எண்ணெய் கழிவுகள் கலந்துள்ள பகுதியில் ஆய்வுப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் என தனித்தனியாக ஆய்வு பணிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த எட்டு நாட்களாகியும் இன்னும் எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

எண்ணெய் படர்ந்துள்ளதால் படகுகள், மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளது. 'ஆயில் கண்டைன்மெண்ட் பூம்' என்ற கருவி மூலம் எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காட்டுக்குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஏழு குழுக்களாக பிரிந்து தற்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.