Skip to main content

அ.தி.மு.க.வில் பலரும் சீட் கேட்ட நிலையில்....-மல்லுக்கட்டும் நிர்வாகிகள் !

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

திருப்போரூர், மாமல்லபும், திருக்கழுகுன்றம் மூன்று பேரூராட்சிகள், 105 கிராம பஞ்சாயத்துகள், 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் மீது அ.தி.மு.க.வின் கவனம் கூடுதலாக உள்ளது. மீண்டும் வென்றே ஆக வேண்டும் என்று முழு அதிகார பலம், பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. அ.தி.மு.க.வில் பலரும் சீட் கேட்ட நிலையில்... மத்திய மா.செ. திருக்கழுகுன்றம் ஆறுமுகத்திற்க்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒருமாத காலமாக அமைச்சர் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார். 

 

kothandapani



ஈ.சி.ஆர். பகுதி ரெஸார்ட்கள், பண்ணை வீடுகளில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். ஆளுந்தரப்பில் வன்னிய சமுதாய வாக்கு வங்கியான இத்தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு, பா.ம.க.வின் பலம் சற்று  தூக்கிப்பிடிக்கும். வேட்பாளர்களில் எளிமையானவராக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோதண்டபாணி டி.டி.வி. அணியில் போட்டியிடுவதால் மாமல்லபுரம் பகுதிகளில் சற்று பின்னடைவு. முன்னாள் ச.ம.உ.வான தண்டரை மனோகரனுக்கு சீட்டு தரவில்லை என்பதால் அ.தி.மு.க.வில் சற்று கோஷ்டி பூசலும் நிலவுகிறது.
 

shanmugam



தி.மு.க. வேட்பாளர் செந்தில் என்ற இதயவர்மன் மா.செ அன்பரசனின் ஆதரவாளர். வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். திருக்கழுகுன்றம் பகுதி இவருக்கு சவாலாக இருக்கும். சொந்தக் கட்சிக்காரர்களை அனுசரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனினும் சொந்த செல்வாக்கு பெற்றவர். அ.தி.மு.க. எதிர்ப்பு அலைகளும், ஆளுங்கட்சிப் பூசலும், டி.டி.வி. தரப்பு பிரிக்கும் வாக்குகளும் இவருக்கு வலுச்சேர்க்கும்... ஆனாலும் சற்று உழைக்க வேண்டும்.