Skip to main content

150 வருட பழமையான காந்தி மார்க்கெட் மீட்க்கப்படுமா! வியாபாரிகள் குமுறல்!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

திருச்சியில் மிக முக்கியமான இடங்களில் திருச்சி காந்தி மார்க்கெடுக்கு என்று தனி இடம் உண்டு. இப்போது அந்த மார்கெட்டை மணிகண்டம் கள்ளிக்குடிக்கு இடத்திற்கு மாற்றம் செய்கிறார்கள். அதன் பிறகு இந்த இடம் என்னவாகும் என்பது தற்போதைய எல்லோருடைய கேள்வி.

எப்போதும் ஜன நெரிசல், ஒரு பக்கம் உழைப்பாளிகளின் வியர்வை வாசனை என மக்கள் கூட்டம் அதிகம் காணும் காந்திமார்க்கெட் இல்லாத ஒரு இடத்தை நினைத்து பாக்கவே மனதில் ஒரு வித கலக்கத்தை ஏற்படுகிறது. 
 

காந்தி மார்க்கெட் வரலாறு மிக நீண்டது. காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டது. முழுமையான 1934-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.

 

 


நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர் கடந்த 1924 முதல் 1948 வரை திருச்சி நகராட்சி தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த 1934-ம் ஆண்டு காந்தியடிகள் திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். இப்போது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

6.25 ஏக்கர் நிலப்பரப்பளவு கொண்ட இந்த மார்கெட்டில், தற்போது 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை, தரைகடை, வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது மார்கெட் பகுதியைச் சுற்றி பழ மண்டி, வெங்காய மண்டி, வாழை மண்டி, உருளை மண்டி, மீன் மார்கெட், என மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

149 ஆண்டுகள் பழமையான இந்த மார்கெட், நகரில் அதிகரித்துவிட்ட மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால், அரசு நவீன வசதிகளுடன் மார்கெட் கட்டி கொடுத்தும் வியாபாரிகள் அங்குச் செல்ல மறுப்பது ஏற்புடையது அல்ல என நம்மில் பலரின் கருத்தாக உள்ளது.

  150 years old Gandhi market to be recovered! Merchants forgive!


 

அதில் சில வியாபாரிகள் கூறியதாவது,  
 

காந்தி மார்கெட் 25 ஏக்கரில் 800 மொத்த வியாபாரிகள், 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள், தரைகடை வியாபாரிகள் எனப் பயன்படுத்தி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு சுமார் 300 லாரிகள் வந்து செல்கிறது. 200க்கும் அதிகமான சிறிய அளவிலான வாகனங்கள் உள்ளே வந்து செல்கிறது. அதில் 30 முதல் 35 டன் வரை காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. சுமார் 700மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது.

ற்போது ஒவ்வொருத்தரும் வைத்துள்ள கடையில் அளவு 2 ஆயிரம் சதுர அடி உள்ளது. அதில் விற்பனைகள் போக மீதமுள்ள 30 சதவீத காய்கறிகளை தினமும் இருப்பு வைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் புதிதாக ஆரம்பிக்கும் கடைகளை ஆரம்பத்தில் சின்ன அளவில் கட்டியிருந்தாலும் தற்போது வியாபாரிக்கு ஏற்ற அளவு மாற்றி கட்டியிருக்கிறார்கள். 
 

“முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயிலலிதா 30.06.2014 புதிய ஒருங்கிணைந்த மார்கெட் கட்டப்படும் என்று அறிவித்தபோது வியாபாரிகள் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள் தற்போது இல்லை காரணம் அதிகாரிகள் மணிகண்டம் செல்லும் சாலையில் உள்ள கள்ளிக்குடி என்ற இடத்தைத் தேர்வு செய்தார். கட்டுமான பணிகள் துவங்கும் போதே, இடவசதி இல்லை. இதுகுறித்து வியாபாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதற்கு ஏற்ப கட்டுமானப் பணியை துவங்குங்கள் என வியாபாரிகள் மனு கொடுத்தார்கள்

 

 


ஆனால் அதிகாரிகளோ, இவை உங்களுக்கான கடைகள் இல்லை என்று சொன்னதால் ஆரம்பத்தில் வியபாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் 95 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் எங்களை வலுக்கட்டாயமாக புதிய மார்கெட்டிற்கு மாற்றியிருக்கிறார்கள்.

திருச்சியில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள அந்த மார்கெட்டிற்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுயிருக்கிறார்கள். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சரியாக 10 அடி தூரத்தில், மார்கெட் நுழைவாயில் உள்ளது. இரவு நேரங்களில் சரக்கு லாரிகள் வரத்து அதிகமானால், கடுமையான சிக்கல் ஏற்படும்.

100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட திருச்சி காந்தி மார்கெட் 8 வாசல்கள் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 2 வாசல்கள் மட்டுமே உள்ளது என்பது இன்னோரு சிக்கல். அதோடு ஒரு அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தை வாங்கி அரசு மார்கெட் கட்டியுள்ளது. அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒருவேளை அந்த அறக்கட்டளைக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் எங்கள் நிலை என்னாகும்? 


  150 years old Gandhi market to be recovered! Merchants forgive!


சில்லரை வியாபாரிகளில் ஒருவரான திருச்சி கமலக்கண்ணன் கூறியதாவது, 

காந்தி மார்கெட் பகுதியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் 4 ஆயிரம் பேர் உள்ளனர். நாங்கள் அதிகாரிகளிடம் பேசுகையில், கடை எங்களுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளனர். மொத்த வியாபாரிகளுக்கு என்று தெரிவித்ததால் நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. காந்தி மார்கெட்டில் சுமார் 4 ஆயிரம் சில்லறை வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் உள்ளனர். இங்குள்ள சில்லறை மற்றும் தரைக்கடை வியாபாரிகளான நாங்கள் இங்கேதான் இருப்போம்.

பெரிய கனரக வாகனங்களை மட்டும் 30ம் தேதி முதல் அனுமதிக்கமாட்டோம் என்று கலெக்டர் அறிவித்தார் ஆனால் சின்ன மினிடோர் உள்ளிட்ட வாகனங்களை உள்ளே விட மறுக்கிறார்கள். காந்திமார்க்கெட் மூட விட மாட்டோம். இதை சிறு வியாபாரிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என்கிறார். 


 

150 years old Gandhi market to be recovered! Merchants forgive!


 

29.06.2018 திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்கள் சார்பில் ‘காந்தி மார்க்கெட் இங்கேயே இயங்கும்’ என்ற தலைப்பில் கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகளை காக்க அவர்கள் இதே மார்க்கெட்டில் தொடர்ந்து வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். காந் மார்க்கெட் வெளிப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

லாரிகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகருக்குள் வர அனுமதித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம், சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டிக்காக காந்திமார்க்கெட் இடத்தை கையகப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் பழைய பால்பண்ணை, மகளிர் சிறை போன்ற பகுதியில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

150 years old Gandhi market to be recovered! Merchants forgive!


 

கூட்டத்தில் பேசிய வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளையன், திருச்சி காந்தி மார்க்கெட் மிக நீண்ட வரலாறு கொண்டது. இந்தியாவிலேயே மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே மார்க்கெட் என்கிற பெருமை உண்டு. போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைக்காக இதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது. போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க மாவட்ட மாநகராட்சி நிர்வாகங்கள் வேறு வழி என்ன என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்.

 

 


காந்தி மார்க்கெட்டை மொத்தமாக கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்தால் வியாபாரிகள் மட்டும் இன்றி விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதில் பல பிரச்சனைகள் ஏற்படும். போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி காந்தி மார்க்கெட்டை மூடினால் வணிகர்கள் போராட்டம் நடத்தி சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்றார். 


  150 years old Gandhi market to be recovered! Merchants forgive!


 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காந்தி மார்கெட்டில் உள்ள மொத்த வெங்காயமண்டி வியாரிகள் எல்லோரும் சேர்ந்து முத்திரையர் சங்க தலைவர் ஆர்.வி. என்பவருக்கு பால்பண்ணை அருகே சொந்தமாக இடத்தை விலைக்கு வாங்கி மார்கெட் ஒன்றை கட்டிக்கொண்டு அங்கே தங்களுடைய வியாபரத்தை ஆரம்பித்துயிருக்கிறார்கள். இதன் திறப்பு விழாவிற்கு கலெக்டர், மா.செ. அமைச்சர்கள் என்று எல்லோரையும் அழைத்திருந்தாலும், கலெக்டர், மற்றும் மா.செ. குமார் ஆகியோர் புறக்கணித்தனர். ஆனால் அமைச்சர் வளர்மதியும், வெல்லமண்டியும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். 


 

150 years old Gandhi market to be recovered! Merchants forgive!


 

தமிழக அரசு புதிதாக கட்டியுள்ள மணிகண்டம் புதிய மார்கெட்கெட் “10 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மார்கெட்டில் ஆயிரம் கடைகள் உள்ளது. அதோடு 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்கு, தரம் பிரிக்கும் மையம், வியாபாரிகள் தங்கும் அறைகள், வங்கிகள், உணவு விடுதிகள் உள்ளன. 

மேலும், 100 எண்ணிக்கையிலான கழிவறைகள், சோலார் கரண்ட், 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, 50ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டி, 60 டன் வரை எடை போடும் இயந்திரம், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

 

 


மிக நீண்ட தடைகளுக்கு பிறகு கடந்த சில வாரங்களாக அதிகாரிகள் காந்திமார்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகளை வாடகைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சிதலைவர், எம்.பி.யும் மா.செ. குமார் மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி, வளர்மதி, ஆகியோர் தலைமையில் இன்று விற்பனையை துவக்குகிறார்கள். 


  150 years old Gandhi market to be recovered! Merchants forgive!


 

இந்த மார்க்கெட் மாற்றம் பிரச்சனை இனி என்ன என்ன விளைவுகளை சந்திக்க போகிறதோ என்பதை போக போக தான் தெரியும். 150 வருட பழமையான காந்தி மார்க்கெட் மீட்க்கப்படுமா! என்பது தான் தற்போது எல்லோருடைய மனதிலும் நிற்கும் கேள்வி.