Skip to main content

”இந்தப் படத்தில் ஆடியன்ஸ்க்கு தனித்துவமான அனுபவம் கிடைக்கும்” - விக்ரம் பிரபு நம்பிக்கை

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

Vikram Prabhu

 

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாணாக்காரன்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், ”’டாணாக்காரன்’ என்ற தலைப்பே மிகவும் அழுத்தமாக இருந்தது. இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன். ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படமாக இப்படம்  இருக்கும். தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களைக் கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது அற்புதமான அனுபவம். தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், டாணாக்காரன் இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது. 

 

இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து,  மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். டாணாக்காரன் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் வெளியீட்டுக்கு நன்றி. டாணாக்காரன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்