Skip to main content

மணிகண்டனுடன் மீண்டும் கூட்டணி - முதல் முறையாக தமிழ் வெப் சீரிஸில் நடிக்கும் விஜய் சேதுபதி

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

vijay sethupathi first tamil web series under manikandan direction

 

'காக்கா முட்டை' படம்  மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான மணிகண்டன், குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என யதார்த்தமான படங்களை இயக்கி பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கடைசி விவசாயி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு திரை விமர்சகர்களாலும் பெரிதாகப் பாராட்டப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து மணிகண்டன் ஒரு படம் இயக்க உள்ளதாக முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஒரு வெப் சீரிஸிற்காக இணைந்துள்ளனர். இத்தொடர் மூலம் முதல் முறையாக தமிழ் வெப் சீரிஸில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த தொடரை விஜய் சேதுபதியை வைத்து 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தயாரிக்கிறார். இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு மதுரை அருகே உசிலம்பட்டியில் பூஜையுடன் தொடக்கி நடைபெற்று வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகவுள்ளது. 

 

முன்னதாக இந்த தொடரில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அது போல் படக்குழு எதுவும் குறிப்பிடவில்லை. விரைவில் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி இந்தியில் ஜவான், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் மற்றும் காந்தி டாக்ஸ் என்ற தலைப்பில் ஒரு மவுன படத்தில் நடிக்கிறார். நேற்று (31.03.2023) இவர் நடிப்பில் வெளியான 'விடுதலை பாகம் 1' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
hotstar new series uppu puli kaaran  first look released

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அடுத்து வழங்கும் புதிய சீரிஸ், 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் என்பவர் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.