Skip to main content

ஜன நாயகன் பட டீசர்; ஸ்பெஷல் நாளில் வெளியிட படக்குழு திட்டம்

Published on 08/05/2025 | Edited on 08/05/2025
vijay jana nayagan teaser update

வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 

இப்படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகியுள்ளது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்யின் பெயர் அவரது கட்சியை குறிக்கும் வகையில் ‘தளபதி வெற்றிக் கொண்டான்’ என வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்றது. அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு கையசைத்து ஜீப்பில் நின்றபடியே விஜய் நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் படத்தின் டீசர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என நம்புவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்