Published on 08/05/2020 | Edited on 08/05/2020
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டனியில் வெளியான வடசென்னை படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதையடுத்து இப்படம் மேலும் 2 பாகங்களாக வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ் நடித்தார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில் வடசென்னை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது வடசென்னை 2 குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அதில், ''வடசென்னை 2 படம் எடுக்க இன்னும் காலம் பிடிக்கும். அதை ஒரு வெப்சீரிஸாக எடுக்கலாமா என்ற யோசனையும் எனக்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.