Published on 11/10/2022 | Edited on 11/10/2022

மரகத நாணயம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான ஏ.ஆர்.கே சரவன் இயக்கும் வீரன் படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்தும் வருகிறார். இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் என தெரிவித்துள்ளது.