Skip to main content

வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் என்ன?

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

hdtjdtjdf

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வசந்தபாலன், நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக 'சார்பட்டா பரம்பரை' துஷாரா விஜயன் நடிக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாக பாதியில் தடைப்பட்டது.

 

தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ஜே.எஸ்.கே. மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 10ஆம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னொருபுறம் இப்படத்துக்கு 'பத்தாம் கட்டளை' என பெயரிடப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்