Skip to main content

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு இரு தமிழ்ப்படங்கள் தேர்வு!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

golden globe

 

ஆஸ்கார் விருதிற்கு அடுத்தபடியாக, உலகத் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படக்கூடிய மற்றும் கௌரவமாகக் கருதக்கூடிய விருது கோல்டன் குளோப் விருது ஆகும். இவ்விருது விழாவானது வருடந்தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். ஆங்கில படங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பிற மொழிப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வருடம் ஃபிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 78-வது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு, இரு தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளன.

 

அவை, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் ஆகும். இதனையடுத்து, உற்சாகமான இவ்விரு நடிகர்களின் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமுக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.   

 

உலகம் முழுவதிலும் இருந்து வந்த 127 படங்களில் இருந்து 50 திரைப்படங்களை நடுவர்கள் குழு திரையிடுதலுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்கள் மட்டுமே இவ்விருதுவிழாவில் பங்கேற்க முடியும் என்ற விதியானது, கரோனா நெருக்கடி நிலை காரணமாக, ஓடிடி-யில் வெளியாகும் படங்களும் பங்கேற்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்