Skip to main content

ஹாய் செல்லம்... விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் - வைரலாகும் நியூ க்ளிக்

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

thalapathy66 movie vijay and prakash raj photo goes viral

 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'தளபதி 66' படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில்  பகிர்ந்த பிரகாஷ் ராஜ், "ஹாய் செல்லம்ஸ், வி ஆர் பேக்" என்று குறிப்பிட்டுள்ளார். வெள்ளை நிற தாடியுடன் சற்று மாறுபட்ட புதிய லுக்கில் விஜய் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய், பிரகாஷ் ராஜ் கூட்டணியில் வெளியான கில்லி, போக்கிரி, வில்லு ஆகிய படங்கள் பெரும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாற்றத்திற்காக வாக்களித்தேன்” - பிரகாஷ் ராஜ்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
prakash raj voted his vote in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். நீங்க தேர்ந்தெடுக்க போறவங்க தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு பண்ண போறவங்க. உங்களுடைய குரல் அங்கு எழுப்பனும்னா ஓட்டு போடுங்க. நீங்க ஓட்டு போடலைன்னா, நீங்க கேள்வி கேட்கிற தகுதியும் அந்த உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், அவர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார். 

இதனிடையே அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், “மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்தேன். நான் நம்பும் மற்றும் என்னுடைய குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யும் வேட்பாளருக்கு வாக்களித்தேன்” என்றார். 

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.