Skip to main content

சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய நடிகர் சோனு சூட்! 

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

sonu sood

 

தன்னுடைய திரைப் பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்கி, பல வருட முயற்சிக்குப் பின்னர் தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வருகிறார் சோனு சூட்.

 

கரோனா காலகட்டத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியின்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து அனுப்பி வைத்தார். இதன்பின் ட்விட்டரில் அவருக்குப் பலர் உதவிகள் கேட்டு கோரிக்கை வைக்க, அவற்றையும் செய்துகொடுத்தார் சோனு.

 

அண்மையில்கூட நடிகர் விஷால் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவரை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்துமொழி சினிமா துறையிலும் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், சோனு சூட்டுக்கு நடிக்க வாய்ப்புகள் வருகிறது. கால்ஷீட் கேட்டு அணுகியபோது, தனது சம்பளத்தை இரண்டு மடங்காக ஏற்றிவிட்டதாகவும், ஏற்கனவே இரண்டு கோடி சம்பளம் வாங்கிவந்த சோனு, தற்போது நான்கு கோடி கேட்பதாகவும் தகவல் பரவியுள்ளது. 

 

பாலிவுட்டை தாண்டி டோலிவுட்டில் அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'டென்ஷன் ஆகாதீர்கள்;பிரார்த்தனை செய்யுங்கள்''-சோனு சூட் ட்வீட்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

'Don't be tense; pray' '- Sonu Suite Tweet!

 

நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

 

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பம் ஒன்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் பிறக்கும் பொழுதே நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலமே அவற்றை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வறுமை காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமியின் வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து உதவி செய்ய முன்வந்துள்ளார். சிறுமியுடைய வயிற்றில் கூடுதலாக உள்ள கைகள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையான பரிசோதனையை மருத்துவர்கள் செய்யும் புகைப்படத்தையும், வீடியோவையும் ட்வீட் செய்துள்ள சோனு ''டென்ஷன் ஆகாதீர்கள் சிகிச்சை தொடங்கிவிட்டது. பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மேலும் பிரபலமானவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

வெளியான தகவல்... சோகத்தில் சோனுசூட் ரசிகர்கள்...!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Released information ... Sonu Sood fans in grief ...!

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

நண்பகல் 12 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-03 இடங்களிலும், காங்கிரஸ்-03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 89 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 01 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமான நடிகர் சோனு சூட், பஞ்சாப் தேர்தலில் தனது தங்கையைக் களமிறக்கியிருந்தார். தனது தங்கை மாளவிகாவின் விருப்பத்தை தொடர்ந்து பஞ்சாப்பின் மேகா தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்நிலையில் மாளவிகா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ''எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் எப்போதும் பொழியும் அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறார் எனது தங்கை" என சோனுசூட் நம்பிக்கையுடன் கூறியிருந்த நிலையில் அவரின் பின்னடைவு தொடர்பாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.