Skip to main content

“ஞானவேல் ராஜா வாரியிரைத்த வன்மம்...” - சசிகுமார் ஆவேசம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

sasikumar about ameer ke gnanavel raja issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். 

 

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான சசிகுமார், “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். பருத்தி வீரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” என அமீருக்கு ஆதரவாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

 

இதையடுத்து தற்போது மீண்டும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்திருப்பதாவது, “அண்ணன் அமீர் இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்” என குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தற்கொலைக்கு தூண்டியதாக புகார்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Complaint against producer Gnanavel Raja for jewells stolen issue

சென்னை தி.நகர் பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுப் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத் திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாக கூறப்படும் நிலையில் மீண்டும் விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் லட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக் கண்ட லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகைச்சை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே பணிப்பெண் லட்சுமியின் மகள் மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும், தனது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் கொடுத்துள்ளார்.

Next Story

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Producer Gnanavel Raja Housemaid incident

ஸ்டூடியோ கிரீன் என்ற பேனரில் திரைப் படங்களைத் தயாரித்து வரும் ஞானவேல் ராஜா, தற்போது சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், கார்த்தியின் வா வாத்தியாரே உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார். 

இதனிடையே கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுப் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத் திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.