Skip to main content

"அவர்தம் படைப்புகள் மூலம் தமிழுலகில் என்றும் நிலைத்திருப்பார்" - சரத்குமார் உருக்கம்!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021
tegegeg

 

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்குச் சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை காரணமாக சிகிச்சையிலிருந்த நிலையில், தமது 99வது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

fegfsgedg

 

"தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என அழைக்கப்பட்டவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. எழுத்துலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி மறைந்த அன்னார் அவர்தம் படைப்புகள் மூலம் தமிழுலகில் என்றும் நிலைத்திருப்பார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்." எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்