The tragic decision of the young man who incident happened 8 members of the family

மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், போடல் கச்சார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவருக்கு கடந்த 21ஆம் தேதி வர்ஷா பாய் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற 8வது நாளான நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், கோடாரியல் தனது மனைவியை வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisment

அதன் பின்னர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாய், சகோதரர், சகோதரரின் மனைவி, சகோதரி, மற்றும் 3 குழந்தைகள் என ஒருவர் பின் ஒருவராக சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்தத்தொடர் கொலை சம்பவத்தில் தாக்கப்பட்ட மற்றொரு 10 வயது சிறுவன் சிறு காயங்களுடன், அங்கிருந்து தப்பிச் சென்று இந்தச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, தினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

Advertisment

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்து தப்பிச் சென்ற தினேஷைதேடி வந்தனர். அப்போது, அவர் 100மீட்டர்தொலைவில் உள்ள மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடலையும், தற்கொலை செய்த தினேஷின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.