Skip to main content

பாகுபலி படத்தை கலாய்க்கும் சந்தான பட ட்ரைலர்...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

biskoth

 

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்கோத்’ படத்தின் ட்ரைலர் வெளியானது.

 

‘ஜெயம் கொண்டான்’ படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிஸ்கோத்’. இந்த நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படத்தில் ராஜா, ஸ்பார்டன்ஸ், 70களின் ஹீரோ கெட்டப்களில் சந்தானம் நடித்துள்ளார். ‘ஏ1’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா பெர்ரிதான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கையில் பாகுபலி, ஸ்பார்டன்ஸ், பில்லா உள்ளிட்ட படங்களை கலாய்த்திருப்பது தெரிய வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் விஷாலும் இல்ல... சிம்புவும் இல்ல” - தனது ஸ்டைலில் சந்தானம் 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
santhanam movie Inga Naan Thaan Kingu trailer released

சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வழங்க, சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் இப்படம் உருவாகும் நிலையில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி பிரியாலயா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையாவும், மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்க இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. கலர்ஃபுல்லாக அந்த போஸ்டர் அமைந்திருந்த நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 90களில் பிறந்த இளைஞனாக வரும் சந்தானம் திருமணத்திற்குப் பெண் தேடுகிறார். பின்பு திருமணம் முடிந்த பிறகு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறர். அதிலிருந்து தப்பித்தார இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் ட்ரைலர் அமைந்திருக்கிறது. மேலும் சந்தானம் “நடிகர் சங்கத்தைக் கட்டி முடிச்சிட்டுத்தான் கல்யாணம் பனண்ணுவேன்னு அடம்பிடிக்க நான் விஷாலும் இல்ல. எப்பவும் சிங்கிளா சுத்திகிட்டு இருக்கிறதுக்கு சிம்புவும் இல்ல” என ட்ரலைர் ஆரம்பத்தில் பேசும் வசனம் வழக்கமான அவரது கிண்டல் கலந்த ஸ்டைலில் இடம்பெறுகிறது. இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.