Skip to main content

விஜய்சேதுபதி படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ரஜினிகாந்த்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Rajinikanth praises Vijay Sethupathi maamanithan movie

 

சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். 'ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். ரிலீஸ் தேதி பல முறை மாற்றம் செய்யப்பட்டு இறுதியாக நேற்று (24.6.2022) வெளியான இப்படம்  பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

 

இந்நிலையில்   மாமனிதன் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை தொலைபேசியின் மூலம் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதனைப் படத்தின் வினியோகஸ்தர் ஆர்.கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே போன்று மாமனிதன் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவை வெகுவாக பாராட்டியதோடு, விஜய் சேதுபதி நடிப்பிற்குத் தேசிய விருது வழங்க வேண்டும் எனத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்