Skip to main content

'ஆளப் போறான் தமிழன் என்கிற பாடலின் தத்துவம் இவர்கள் மூலம் உண்மையாகிறது' - ரா.பார்த்திபன் 

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
parthiban

 

 

 

உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக Vuclip President & COO அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குனர்கள் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். Viu லோகோவையும் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.

 

 

 

Vuclip President & COO அருண் பிரகாஷ் வரவேற்றுப் பேசும்போது, "நான் ஒரு தமிழன். மீண்டும் தாய்நாட்டுக்கு வந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சென்னை வந்த பின் 25 வருடத்திற்கு பிறகும் அதே கலாச்சாரத்தை பார்க்க முடிந்தது. இந்த தொழில் நுட்பம் இந்த அளவுக்கு நிச்சயம்  வளரும் என்ற நம்பிக்கையில் தான் இது துவங்கப்பட்டது.  துவக்கத்தில் நிறைய சவால்களை சந்தித்தோம். பைரஸி மிகப்பெரிய ஒரு பிரச்சினை. பைரஸியோடு போராட, புதிய விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுப்பது என முடிவெடுத்தோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு PCCW உடன் இணைந்து VIU துவக்கினோம். தென்கிழக்கு ஆசியாவில் முதல் இரண்டு இடங்களில் நாங்கள் வெற்றிகரமாக இருந்து வருகிறோம். தமிழில் இளைஞர்கள் புதுமையான, நல்ல தரமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். இன்று நாங்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகள் வெறும் ஆரம்பம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் 100 ஒரிஜினல் நிகழ்ச்சிகளை தயாரிக்க இருக்கிறோம்" என்றார். 

 

venkat prabhu

 

குறும்படங்கள் இயக்கி விட்டு இயக்குனராவது தான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால் நான் சினிமா இயக்கி விட்டு குறும்படம் இயக்கியிருக்கிறேன். மாஷா அல்லா கணேஷா கதை என்னை ரொம்பவே ஈர்த்தது. மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ரொம்பவே ஆசை. சம்பத், டி சிவா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். சென்சாருடன் சண்டை போட்டே, நிறைய விஷயங்களை சினிமாவில் சொல்ல முடியவில்லை. இதில் சென்சார் இல்லை என்பதால் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படி ஒரு தளம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி என்றார் மாஷா அல்லா கணேஷா என்ற குறும்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு.

 

 

 

வேறு எங்கு வெற்றி பெறுவதையும் விட, தமிழ்நாட்டில் மிக வேகமாக ஜெயிக்கலாம். 17 ஆண்டுகள் நான் இயக்குனராக இருந்தும் என்னிடம் இருந்து குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் இயக்குனராக வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. யாஸ்மின் அந்த குறையை தீர்த்திருக்கிறார், அடுத்த ஆண்டுக்குள் 6 பேர் நல்ல திறமையோடு இயக்குனராக வருவார்கள். நிறைய உதவி இயக்குனர்கள், வீட்டை விட்டு சென்னை வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் யாஸ்மின் 7 வருடங்களாக சிங்கப்பூரில் இருக்கும் குடும்பத்தை பிரிந்து வந்து இங்கு கடுமையாக உழைத்து இன்று இயக்குனர் ஆகியிருக்கிறார் என்றார் இயக்குனர் ராஜா. தமிழ் சினிமாவில் வாம்பயர் கதைகள் கொண்டு வருவது சாத்தியமில்லாமலே இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஹாரர், வாம்பயர் கதைகள் மிகவும் பிடிக்கும். இந்த கதையை எடுக்க வாய்ப்பு கொடுத்த, உறுதுணையாக இருந்த Viuக்கு நன்றி என்றார் இயக்குனர் நந்தினி ஜேஎஸ். 

 

viu

 

செம்ம ஃபீலு ப்ரோ என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் நம்மை உணர வைத்திருக்கிறது இந்த விழா. இந்த Viuவின் CO ஒரு தமிழர்.ஆள போறான் தமிழன் என்கிற பாடலின் தத்துவம் இவர்கள் மூலம் உண்மையாகிறது. இந்த துறை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அனைவருக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். Contentக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்றார் நடிகர், இயக்குனர் பார்த்திபன். மேலும் நடிகர்கள் நாசர், கயல் சந்திரன்,சாந்தனு, சம்பத்,  அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, அஸ்வின் காகமானு, நடிகைகள் பூஜா தேவரியா, குட்டி பத்மினி, காயத்ரி,ரூபா மஞ்சரி,  கீ கீ விஜய் தயாரிப்பாளர்கள் ரகுநாதன், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எஸ் ஆர் பிரபு, சமீர் பரத் ராம், இயக்குனர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், பிரவீன் காந்தி, ஸ்ரீகணேஷ், எடிட்டர் பிரவீன் கேஎல் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

3 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல், இந்த முறை 6 மாதங்கள் தாமதமாக இன்று (23.06.2019) நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...

 

actor Parthiepan speech about election

 

“எனக்குத் தெரிந்து இரண்டு அணியினரும் நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுறாங்க, இரண்டு பேரும் நடிகர் சங்க கட்டிடத்தை உடனே கட்டவேண்டும் என நினைக்குறாங்க. எனக்கு கட்சி பாகுபாடு எதுவும் இல்லை, யார் வெற்றிப்பெற்றாலும் எனக்கு சந்தோஷம்தான்.  ஆனால், இன்று படப்பிடிப்பிற்காக மும்பை செல்வதற்கு எனக்கும் என் அசோஷியேட் டிரேக்டருக்கும் ஃப்லைட் டிக்கெட் எடுத்திருந்தோம், திடிரென தேர்தல் வைத்ததால், அந்த டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டு வந்தோம், அதனால், எனக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆனது. என்னைப் போல எல்லோரும் இப்படி வரமுடியுமா? ஏன் இந்த குழப்பம் என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. 
 

நான் இப்போது விழுந்தடித்து ஓடி வருகிறேன், எல்லோரும் இப்படி வருவார்களா என்று தெரியாது. நமக்கு இதில் என்ன முக்கியத்துவம் என்று நினைப்பார்கள். எதற்கு இந்த போட்டிகள், தேர்தல் முடிந்ததும் எல்லோரும் கூடித்தான் வேலை செய்வோம். ஒரு அமைப்பாக இருக்கிற நாம் நமக்குள் பேசி முடித்திருக்கலாம், இந்த தேர்தலே எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது”. என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

 

 

 

Next Story

இதனால் தான் நான் 'இளையராஜா 75' நிகழ்ச்சியிலும், சங்கத்திலுருந்தும் வெளியேறினேன் - மனம் திறந்த பார்த்திபன் 

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
parthiban

 

'இளையராஜா 75' நிகழ்ச்சியின் முதுகெலும்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் தனது தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் பார்த்திபன். அத்தோடு நில்லாமல் ராஜாவின் இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். பார்த்திபனின் செயலில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட விஷால் அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும் அவரது இருட்டடிப்பில் இருந்த உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வராமல் இருந்த நிலையில் தனது தரப்பு குறித்து விரிவான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் பார்த்திபன்.

 

"நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். 'பலூன் பறக்க காற்று எப்படி காரணமோ அதை போல தான் தமிழர்களுக்கு இளையராஜா இசையும்’ என்று நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட் எழுதி வைத்து இருந்தேன். ஆனால் திடீர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரவணன் எனக்கு போனில் ‘நடிகர் ரமணா ஸ்கிரிப்ட் தயார் செய்து எடுத்து வருவார். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியானது. நிகழ்ச்சி நடந்த அன்று காலை வரை நிகழ்ச்சி தொகுப்பாளரை முடிவு செய்யவில்லை. நான் நந்தாவிடம் சொன்னபிறகு என்னையே தொகுப்பாளரை நியமிக்க சொன்னார். நான் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம், நானே சொல்லிவிட்டேன்’ என திடீர் என்று கூறினார். நந்தாவிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே என்று கேட்டேன். அவர் மழுப்பினார். இதன்மூலம் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

 

 

அந்த நிகழ்ச்சியில் மேடை ஒருங்கிணைப்பு ஏனோ தானோ என்று இருந்தது. இளையராஜாவை மேடையில் அமரவைத்து அவமானப்படுத்தினார்கள். எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாகக் கூறிவிட்டேன். டிரம்ஸ் சிவமணி ஒப்புக்கொண்டு இருந்த ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செய்ய சொல்லி இந்த விழாவில் கலந்துகொள்ள கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு பதிலாக மற்ற இசை அமைப்பாளர்களை வைத்து இளையராஜாவின் பாடலை இசைக்க திட்டமிட்டேன். இந்த இரண்டையுமே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை மட்டுமே செய்தார்கள். விஷாலுக்காக களத்தில் இறங்கி பணிபுரிவது நந்தாவும், ரமணாவும் தான். விஷாலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் நடத்துகிறார்கள். விஷால் ஒரு வார்த்தை அவர்களிடம் ‘நிகழ்ச்சியை நீங்கள் நடத்துங்கள். கிரியேட்டிவ் வி‌ஷயங்களை பார்த்திபனிடம் விட்டு விடுங்கள்’ என்று கூறி இருக்கலாம். அதை சொல்லவில்லை என்பது எனக்கு வருத்தம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என்னை ஓரமாக உட்கார வைத்தார்கள்.

 

இப்படி மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் எது நடந்தாலும் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன். இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவிடம் 3ந்தேதி நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கும்போது என் பெயரை சொல்லும்போது ரமணா அவர் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்போது அந்த சந்திப்பில் விஷாலும் உடன் இருந்து இருக்கிறார். இதை கேள்விப்பட்ட உடனே ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துவிட்டேன். இப்போதும் விஷாலுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் எனக்கு நேர்ந்த அவமானங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ரஹ்மானிடம் நான் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் என்றுதான் சம்மதிக்க வைத்தேன். அதனால் தான் என் ராஜினாமா வி‌ஷயத்தை சொல்லாமல் ரஹ்மானை கலந்துகொள்ள வீட்டிற்கு சென்று வழி அனுப்பி வைத்தேன். விஷாலை நான் ஆதரிப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். விஷால் நந்தாவையும், ரமணாவையும் முழுமையாக நம்புவது தவறு இல்லை. ஆனால் விஷாலை போல எல்லோரையும் அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.