Skip to main content

ரசிகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நாகர்ஜுனா!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Nagarjuna met the fan in person and expressed regret

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம்  ‘குபேரா’. இப்படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து தொட்டு பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாகர்ஜுனா தெரிவித்தார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டார். 

இந்த நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட அந்த ரசிகரை விமான நிலையத்தில் நாகர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அந்த ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, ‘உங்கள் மீது எந்த தப்பும் இல்லை’ எனக் கூறி அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுவெளியில் இளம்பெண்ணைத் தாக்கிய உறவினர்கள்; அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Relatives incident happened teenage girl in public in meghalaya

மேகலாயா மாநிலம், மேற்கு கரோ ஹல்ஸில் மாவட்டத்தில் தாதெங்க்ரே பகுதி ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில், 20 வயதுமிக்க பெண் ஒருவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனை அறிந்த உறவினர்கள், அந்தப் பெண்ணை பொதுவெளியில் அழைத்துவந்து கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த சிலர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில், பெண் ஒருவர் பொதுவெளியில் வைத்துக் கொடூரமாக தாக்கப்படுகிறார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வீடியோ வைரலான சில மணி நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இளம்பெண்ணைத் தாக்கிய 6 பேரை கைது செய்தனர்.

இதனிடையே, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மேகாலயா சட்டமன்றக் குழுவின் தலைவரான சாண்டா மேரி ஷைல்லா, இந்தச் சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு, காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளார். மேலும், மாநில மகளிர் ஆணையமும் இந்தச் சம்பவம் குறித்து தானாக முன்வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்க ஒரு குழுவை அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. 

Next Story

சர்ச்சை வீடியோ; ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நாகர்ஜுனா!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Nagarjuna apologized to the fan

தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ‘குபேரா’ படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது நாகர்ஜுனா அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.