The film crew gave an update on Prashanth's film 'Anthagan

90 காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகாராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் நடித்த படங்களின் தொடர் தோல்வியால், தமிழ் திரையுலகில் காணாமல் போய்விட்டார். இந்த நிலையில், ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை ரீமேக் செய்து அதில் பிரசாந்த் நடிக்கவிருப்பதாகத்தகவல் வெளியானது.

அதன்படி, முதலில் அந்தகன்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென்று, இப்படத்தை இயக்குநரும், பிரஷாந்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கினார். மேலும், இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உலகம் முழுவதும் டிஸ்ரிஃபூசன் செய்கிறார். .

நீண்ட தயாரிப்பில் இருந்த இப்படம், எந்தவித அப்டேட்களும் இல்லாமல், வெறும் பண்டிகை நாட்களில் வாழ்த்து போஸ்டர்களை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் பிரசாந்த், தற்போது விஜய் நடிப்பில் உருவாகும், ‘கோட்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment