Skip to main content

'ஒன் நேஷன்' - ஒன்றினையும் மோகன்லால், கங்கனா ரணாவத்?

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

 Mohanlal and Kangana Ranaut to act in One Nation mini series

 

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி அண்மையில் ஆறு இயக்குநர்களை வைத்து 'ஒன் நேஷன்' என்ற சிறிய இணையத் தொடரை உருவாக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த ஆறு இயக்குநர்களாக பிரியதர்ஷன், சஞ்சய் பூரன் சிங் சவுகான், ஜான் மேத்யூ மதன், மஞ்சு போரா, சந்திரபிரகாஷ் த்ரிவிவேதி மற்றும் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் இந்த இணையத் தொடர் ஆறு எபிசோட்கள் கொண்டு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியது. 

 

இந்த நிலையில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் கங்கனா ரணாவத் இந்த தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியதர்ஷன் எடுக்கும் தொடரில், மோகன்லால் நடிப்பதாகவும் விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் தொடரில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இத்தொடரின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியில் தொடங்க உள்ளதாகவும், இந்தியில் வெளியாகி பின்பு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் எனவும் படக்குழு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.