Skip to main content

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய மாஸ்டர் மகேந்திரன்! 

Published on 14/12/2021 | Edited on 15/12/2021

 

master mahendran next movie shooting start today

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன், ‘விழா’, விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஸ்டீபன்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்கிறார். ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்ஹோல் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம். மணிரத்னம் தயாரிக்கிறார்.

 

ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (14.12.2021) தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்