Skip to main content

வைரலாகும் ஹிந்தி ‘காஞ்சனா’லுக்! பாலிவுட் ரசிகர்கள் பாராட்டு...

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

ராகவா லாரன்ஸ் தமிழில் இயக்கி நடித்த படம் காஞ்சனா. இந்த அவருடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல் என்று சொல்லலாம். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
 

laxmi bomb

 

 

இந்தியில் லட்சுமி பாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸுக்கும், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தொடக்கத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் படத்திலிருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதன்பின் அக்‌ஷய்குமார் சமாதானம் செய்து, ரகவா லாரன்ஸையே இயக்க வைக்கியுள்ளார்.

காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுபோல ஹிந்தியில் அமிதாப் பச்சன் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், படக்குழு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
 

ee


தற்போது லட்சுமி பாம் படத்தில் தனது லுக்கை அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். பலரும் இந்த முயற்சிக்காக அக்‌ஷய் குமாருக்கு பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்துடன் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில், “நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமது அளவில்லா வலிமையைக் கொண்டாடுவதுதான் நவராத்திரி. இந்த மங்களகரமான நாளில் எனது 'லக்‌ஷ்மி' தோற்றத்தை உங்களுடன் பகிர்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் ஆர்வமாக எதிர்நோக்கும் அதே நேரத்தில் பதட்டமாகவும் உணர்கிறேன். நாம் சவுகரியமாக உணரும் சூழலின் முடிவில்தான் வாழ்க்கை தொடங்குகிறது இல்லையா?" என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று முன்னமே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"மன்னித்து விடுங்கள், இனி அப்படி நடக்காது" -  நடிகர் அக்ஷய் குமார் வருத்தம்  

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

Akshay Kumar apologises to fans after pan masala brand advertisement

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இவருடன் இந்த விளம்பரத்தில் அஜய் தேவ்கனும், ஷாருக்கானுக்கு நடித்திருந்தனர். ஆனால் அக்ஷய் குமார் நடித்தது  மட்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு கரணம் என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அக்ஷய் குமார் கூறியிருந்தார். ஆனால் அதனை மீறி இந்த பான் மலசல விளம்பரத்தில் நடித்ததால் நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அக்ஷய் குமார் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை மன்னித்து விடுங்கள். இனி வரும் காலங்களில்  இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். உங்களின் உணர்வுகளை பாதிப்பதால் பான்மசாலா விளம்பரத்தில் இருந்து பின் வாங்குகிறேன்.  இதில் கிடைத்த ஊதியத்தை நலத்திட்டங்களுக்கு செலவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறி பலரின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சர்ச்சையால் தலைப்பை மாற்ற திட்டமிடும் லக்‌ஷ்மி பாம் படக்குழு!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

laxmmi bomb

 

 

தமிழில் வெற்றிபெற்ற காஞ்சனா தொடர் படத்தின் முதல் பாகத்தை இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு படத்திற்கு லக்‌ஷ்மி பாம் என பெயரிடப்பட்டிருந்தது. கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாரக இருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. அதன்பின் இப்படம் ஹாட் ஸ்டாரில் நவம்பர் 9ஆம் தேதி நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், படத்தின் பெயர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. லக்‌ஷ்மி என்ற இந்து கடவுளின் பெயரோடு "பாம்" என்ற வார்த்தையை சேர்த்து பெயராக வைத்திருப்பது, அக்கடவுளை அவமதிப்பதுபோல் உள்ளது என  இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் "ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனா" என்கிற அமைப்பு படத்தின் பெயரை மாற்றுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியது. அதில் இந்த படத்தை எடுப்பவர்கள், இந்து கடவுள் லக்‌ஷ்மியை வேண்டுமென்றே அவமதிப்பதற்காக லக்‌ஷ்மி பாம் என பெயர் வைத்துள்ளதாகவும், அப்பெயர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தின் தயாரிப்பாளர்கள்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம், இந்துமத கடவுள்களை பற்றியும் சடங்குகளை பற்றியும் தவறான தகவல்களை தருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் படத்தின் பெயரில் இருந்து பாம் என்ற  வார்த்தை நீக்கப்பட்டு,லக்‌ஷ்மி என படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.