Skip to main content

அடுத்த பாடலை வெளியிட்ட கர்ணன் படக்குழு!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

karnan

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

 

படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் 9-ஆம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'பண்டாரத்தி புராணம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல், இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்