Skip to main content

இளையராஜாவின் ஹிட் பாடலை உபயோகித்த சந்தானம்!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020
zgdzgd

 

 

சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அந்த படத்தில் இடம்பெற்ற 'வைச்சாலும் வைக்காம' என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. தற்போது இந்த பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது 'டிக்கிலோனா' படக்குழு. இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, 'டிக்கிலோனா' படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் 'டிக்கிலோனா' ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. இப்பட ட்ரெய்லரும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் சந்தானம் படங்களின் ட்ரெய்லர்களில் குறைந்த மணி நேரத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட ட்ரெய்லராக 'டிக்கிலோனா' உருவாகியுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

 

கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணனன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப், ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். இப்பட வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் விஷாலும் இல்ல... சிம்புவும் இல்ல” - தனது ஸ்டைலில் சந்தானம் 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
santhanam movie Inga Naan Thaan Kingu trailer released

சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வழங்க, சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் இப்படம் உருவாகும் நிலையில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி பிரியாலயா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையாவும், மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்க இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. கலர்ஃபுல்லாக அந்த போஸ்டர் அமைந்திருந்த நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 90களில் பிறந்த இளைஞனாக வரும் சந்தானம் திருமணத்திற்குப் பெண் தேடுகிறார். பின்பு திருமணம் முடிந்த பிறகு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறர். அதிலிருந்து தப்பித்தார இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் ட்ரைலர் அமைந்திருக்கிறது. மேலும் சந்தானம் “நடிகர் சங்கத்தைக் கட்டி முடிச்சிட்டுத்தான் கல்யாணம் பனண்ணுவேன்னு அடம்பிடிக்க நான் விஷாலும் இல்ல. எப்பவும் சிங்கிளா சுத்திகிட்டு இருக்கிறதுக்கு சிம்புவும் இல்ல” என ட்ரலைர் ஆரம்பத்தில் பேசும் வசனம் வழக்கமான அவரது கிண்டல் கலந்த ஸ்டைலில் இடம்பெறுகிறது. இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.