Skip to main content

கோலிவுட்டை மிரட்டும் மெட்ரோ ஷ்ரீஷின் நான்வயலன்ஸ் ! 

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
 first look of Nonviolence has been released

தமிழின் த்ரில் சினிமாவான மெட்ரோ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் ஈர்க்கப்பட்டவர் இளம் நடிகர் ஷிரிஷ். இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஷிரிஷ். அந்த படத்தில் அவரது நடிப்பு கோலிவுட் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரை உலகில் அதிகம் பேசப்பட்டது. படமும் சூப்பர் வெற்றியை பெற்ற நிலையில், முதல் படத்திலேயே ஹீரோ ஷிரிஷுக்கு ஃப்லிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன. இதனையடுத்து மெட்ரோ ஷிரிஷ்  என்றே அழைக்கப் பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது மெட்ரோ ஷிரீஷ் நடித்து வரும் புதிய  படம் நான்வயலன்ஸ் (அகிம்சை). ஷிரீஷுடன் பாபி சிம்ஹா, யோகிபாபு இணைந்து நடிக்கும் நான்வயலன்ஸ் படத்தை மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஷிரிஸ், ஆனந்த கிருஷ்ணன், யுவன் சங்கர் கூட்டணி மீண்டும் கைக் கோர்த்துள்ள நான்வயலன்ஸ் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் இருக்கிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாகியிருக்கிறது. மேலும், கோலிவுட்டுக்கு மிரட்டலான ஒரு இளம் ஹீரோ கிடைத்துள்ளார் என்கின்றனர் சீனியர் இயக்குநர்க

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேன்டசி டிராமா கதையம்சத்தில் உருவாகும் ‘ராக்கெட் டிரைவர்’

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Rocket Driver movie  is based on a fantasy drama story

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். 

தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை. அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலைவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரண் மேற்கொள்கிறார்கள். அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Next Story

'சட்டமும் திட்டமும் மட்டும் மாற்றி விடாது'-மாரி செல்வராஜ் பேட்டி

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
'You can't change it just by putting laws and plans' - Mari Selvaraj interview

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஓடிடியில் படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், ''எல்லார் வீட்டிலும் சாமி போட்டோ இருக்கிறது. பூஜை அறை இருக்கிறது. ஆனாலும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவது குறையவில்லையே. அதேபோல் தான் இதுவும். சினிமா மக்களால் சேர்ந்து கூடி பார்ப்பது என்பது எப்போதும் மாறாது. ஓடிடி என்பது லைப்ரரி மாதிரி. பார்த்த படத்தை மீண்டும் பார்ப்பார்கள். சிலர் பார்க்காத படத்தையும் பார்ப்பார்கள். ஓடிடி அது போக்கில் இருக்கும். ஆனால் சினிமா எப்பொழுதுமே தியேட்டரில் கூட்டமாக பார்ப்பது என்பதால் தியேட்டரில் மவுஸ் குறையாது'' என்றார்.

தென்மாவட்டங்களில் சாதி கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு படங்களில் இருக்குமா? என்ற கேள்விக்கு, ''அடிப்படையாகவே இங்கு நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. உடனே மாற்ற முடியாது. காலகாலமாக புரையோடிப்போய் காலங்காலமாக மனதில் தங்கி இருக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது. அதையும் ரொம்ப மெனக்கெட்டு மாற்றக்கூடிய நிலை இருக்கிறது. நாம் சாதாரணமாக சொல்கிறோம் ஒரு சட்டம் போட்டால், ஒரு திட்டம் போட்டால் மாற்றி விடலாம் என்று. அதெல்லாம் முடியாது. உளவியலாக ரொம்ப ஸ்ட்ராங்காக ஜாதி இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறையும் சரி, அரசியலிலும் சரி எல்லா தளங்களிலும் சேர்ந்து ஒரு வேலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி செய்தால்தான் அடுத்த தலைமுறையாவது குறைந்தபட்ச புரிதலுக்கு உள்ளாவார்கள் என நினைக்கிறேன்'' என்றார்.