Skip to main content

பிரபல தயாரிப்பாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
The famous producer was sentenced to 6 months in prison

தங்கமீன்கள், தரமணி, குற்றம் கடிதல் போன்ற படங்களை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரித்தவர் ஜெ.சதீஷ்குமார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சினிமா பைனான்சியரான சுகன் போத்ராவிடம் சுமார் ரூ.2.6 கோடி கடன் வாங்கியிருந்தார். 

தான் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்காக தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமார், பைனான்சியர் சுகன் போத்ராவிடம் காசோலையை வழங்கியுள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட சுகன் போத்ரா, வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் 4வது விரைவு நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஏ.கே.என். சந்திரபிரபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அந்தக் கடன் தொகையை வட்டியுடன் சினிமா பைனான்சியர் சுகன் போத்ராவிடம் திரும்பிச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை;  ஆசிரியருக்கு 56 ஆண்டுகள் சிறை!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
56 years in prison for the teacher for incident happened boy

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜப்பார்(60). இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும், இவர் தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் கற்றுக்கொடுத்து வந்துள்ளார். 

இவரிடம் ஏராளமான மாணவர்கள் அரபி பாடம் படித்து வருகின்றனர். அதில் 11 வயது கொண்ட மாணவர் ஒருவர் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அப்துல் ஜப்பார் அந்த மாணவரை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவரை அப்துல் ஜப்பார் மிரட்டி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் மனமுடைந்த அந்த மாணவர், தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் ஓய்வுபெற்ற ஆசிரியரான அப்துல் ஜப்பார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போத்தன்கோடு விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பாலியல் வன்கொடுமை செய்து வந்தவருக்கு எந்தக் கருணையும் காட்டவேண்டிய தேவை இல்லை’ என்று கூறி அப்துல் ஜப்பாருக்கு 56 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். 

Next Story

எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் கைதிகள்; பதவி பிரமாணம் செய்யப்படுமா?

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Will the oath of office be administered? Jail inmates elected as MP

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்துத் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அப்துல் ரஷீத் ஷே என்ற எஞ்சினியர் ரஷீத் சுயட்சையாக போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இதே போன்று, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் உள்ள அம்ரித்பால் சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடு வெற்றி பெற்றுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இருவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அரசியலமைப்பு நிபுணரும், மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளருமான பிடிடி ஆச்சாரி கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்வது அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமையாகும். ஆனால் அவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், எஞ்சினியர் ரஷீத் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் பதவியேற்பு விழாவிற்கு பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். பதவி பிரமாணம் செய்தவுடன் அவர்கள் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்.

பதவி பிரமாணம் செய்த பின்னர் அவையில் கலந்துகொள்ள முடியாத நிலை குறித்து சபாநாயகருக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பின் சபாநாயகர் அவர்களின் கோரிக்கைகளை உறுப்பினர்கள் இல்லாத குழுவுக்கு அனுப்புவார். உறுப்பினர் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதிக்க வேண்டுமா என்று குழு பரிந்துரைக்கும். பின்னர் அந்தப் பரிந்துரை சபாநாயகரால் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும். எஞ்சினியர் ரஷீத் அல்லது சிங் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், 2013 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.