Skip to main content

'சியான் 61' படத்தை இயக்கும் பா.ரஞ்சித்

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

director pa ranjith joins vikram next movie chiyaan61

 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை  வைத்திருப்பவர் விக்ரம். கடாரம் கொண்டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான், அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 

 

 

இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான சர்பேட்டா பரம்பரை திரைப்படம்  பெரும் வெற்றி பெற்று விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'சியான் 61' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்