Skip to main content

மிரட்டும் தனுஷ், செல்வராகவன் - நானே வருவேன் டீசர் வெளியீடு

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

dhanush naane varuven teaser released

 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை பார்க்கையில், தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு தனுஷ் மிரட்டல் லுக்கில் வில்லன் போல வருகிறார். இவருக்கு இணையாக செல்வராகவனும் வித்தியாசமனான லுக்கில் தோன்றுகிறார். இரண்டு தனுஷ் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை ஆக்ஷன் கலந்து சைக்கோ த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இம்மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்