Skip to main content

அமைச்சர் ரோஜாவிற்கு விளையாடக் கற்றுக் கொடுத்த முதல்வர்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
cm jagan mogan reddy teach minister roja to bat

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது, அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து வைரலாவது வழக்கம். அந்த வகையில் முன்னதாக கபடி விளையாடியது, நடனம் ஆடியது, ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட ரோஜாவின் செயல்கள் வீடியோவாக வெளியாகி வைரலானது. 

இதையடுத்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து ஏழை குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் மருத்துவச் செலவுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில், ‘ஆடுவோம் ஆந்திரா’ என்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குண்டூரில் நடைபெறுகிறது. அதன் தொடக்க விழா இன்று நடந்த நிலையில், அதில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று கலந்து கொண்டார்கள். அப்போது அமைச்சர் ரோஜா கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் செய்தார். அப்போது அவர் விளையாடத் தெரியாமல் தடுமாற அவருக்கு முதல்வர் பேட்டிங் கற்றுக் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Jaganmohan Reddy meeting with Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று (09.02.2024) சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடிக்கு திருப்பதி ஏழுமலையான் முழு உருவச்சிலையை நினைவு பரிசாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார். இந்த சந்திப்பின் போது போலவரம் திட்டப்பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும், மின்சாரத்துறை நிலுவைத் தொகையை தரவும் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் மோடியுடன் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அமைச்சர் ரோஜா மீது பண மோசடி புகார்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
minister roja counciler money laundering issue

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் நடிகை ரோஜா. இந்த நிலையில் திருப்பதி மாவட்டம் புத்தூர் நகராட்சியின் கவுன்சிலர் புவனேஷ்வரி என்பவர், ரோஜா மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார். 

புவனேஷ்வரிக்கு நகர் மன்றத் தலைவர் பதவி வாங்கி தருவதாக ரோஜா கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ரோஜாவின் உறவினர் குமாரசாமியிடம் ரூ.40 லட்சம் தந்துள்ளதாக புவனேஷ்வரி தெரிவித்துள்ளார். மேலும் முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 

மேலும், இது தொடர்பாக பேசிய அவர், “இரண்டு ஆண்டுகள் கடந்தும், பதவி வழங்கவில்லை. இது தொடர்பாக அமைச்சர் ரோஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலையிட்டு சரி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.