Skip to main content

“ராமர் கோவிலுக்கு ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 5 ரூபாய்...” - சிரஞ்சீவி அறிவிப்பு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
chiranjeevi about hanuman team donates ramar temple

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது. இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.  

இப்படக்குழு தற்போது ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் சமீபத்தில் படக்குழுவினர் சென்னையில், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசுகையில், “ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி ஹனுமான் குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்காக தங்கள் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 5 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளனர். படக்குழு சார்பாக இதனை நான் அறிவிக்கிறேன். உன்னதமான முடிவை எடுத்த 'ஹனுமான்' குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார். 

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதில் சிரஞ்சீவியும் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

'ராமர் கோவில் கட்ட அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது'-கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
nn

ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது என முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரொம்ப கொச்சையான கேள்விதான். கோயில் கட்டினால் ஆட்சிக்கு வந்திட முடியுமா? ஒரு கோவிலை கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனக்குத் தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தோற்று இருக்கிறார்கள். காரணம் மக்கள் அதற்காக வாக்களிப்பது இல்லை.

அது வேறு இது வேறு. இன்றைக்கு அயோத்தியில் நடைபெற்று இருக்கின்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடைய பணமோ, உபி அரசாங்கத்தினுடைய பணத்தையோ நீங்கள் தண்ணியாக செலவிடுகிறீர்களே. அது எப்படி நியாயமாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி அதைச் செய்ய முடியும்? எந்த நியாயம் எந்த சட்டம் அதை அனுமதிக்கிறது. நீங்கள் ரயிலை எல்லாம் இலவசமாக அனுப்புகிறீர்கள். எப்படி அது சாத்தியம். யார் அதற்கு பணம் கட்டியது? இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. அதற்கு கணக்கு காட்ட முடியுமா? ராமருக்கான புகழைக் கெடுத்து விடாதீர்கள் இதைத்தான் நான் பாஜகவிற்கு, ஆர்எஸ்எஸ்க்கும் சொல்லிக் கொள்வது. அவர் அப்பழுக்கற்றவராக இருந்தார். ஆனால் அவருடைய பெயரை பாழ்படுத்துகிறீர்கள் நீங்கள். அது தவறு என்பதை நாம் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டும். அச்சப்படக்கூடாது'' என்றார்.

Next Story

அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்க அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Permission to set up a KFC restaurant in Ayodhya and condition

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க வருவதால், அவர்களின் வசதிக்காக உள்ளூர் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறப்பதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. அதே வேளையில், அந்த கோவிலைச் சுற்றியுள்ள 15 கி.மீ வரை அளவிலான இடத்தை சுற்றி அசைவ உணவகங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 15 கி.மீ சுற்றளவில் அமைக்கப்படும் பன்னாட்டு நிறுவனமான கேஎஃப்சி உணவகம் போன்ற பன்னாட்டு உணவகத்தில், அசைவ உணவகம் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகங்களில் சைவ உணவுப் பட்டியல் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.