Skip to main content

தமிழில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் பெங்காலி படம்!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

vinci da

 

கடந்த ஆண்டு வெளியான பெங்காலி படம் 'வின்சி டா'. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய இப்படத்தில் ருத்ரனில் கோஷ், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

 

தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்தப் படத்தின் இந்தி மற்றும் தமிழ் உரிமையைக் கைப்பற்ற அணுகியுள்ளார். ஆனால், இந்தி ரீமேக் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதால், தமிழ் ரீமேக் உரிமையை மட்டும் கைப்பற்றியுள்ளார். 

 

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தின் தமிழ் வசனங்கள் மற்றும் திரைக்கதையை இயக்குனர் ராம் மற்றும் தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இது 'டபுள் ஹீரோ' படம் என்பதால் தமிழில் சில முன்னணி நடிகர்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

விரைவில் இயக்குனர் மற்றும் நடிகர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யுவன் - மதன் கார்க்கி கூட்டணியில் வெளியாகும் காதல் பாடல்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Yezhu Kadal Yezhu Malai first single release update

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளதாகப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பிரியாணி, அஞ்சான், வை ராஜா வை, மாநாடு உள்ளிட்ட சில படங்களில் யுவன் இசையில் மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.  

Next Story

“பாய்ச்சலைத் தொடங்கியிருக்கிறது” - மாரி செல்வராஜ் மகிழ்ச்சி

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
mari selvaraj about ram Yezhu Kadal Yezhu Malai

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்று விழாவில் கலந்து கொண்டது படக்குழு. அப்போது கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என இயக்குநர் ராம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரோட்டர்டாம் விழாவில் படத்திற்கு பார்வையாளர்கள் பாராட்டு தெரிவிக்கும் வீடியோவை படக்குழுவினர் சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் அஞ்சலி பகிர்ந்த அந்த வீடியோவை, இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இயக்குநரின் அடுத்த படைப்பான ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் அதிகமான பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு தன் பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.