Skip to main content

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'குதூகலம்'

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

based on true story kuthukalam

 

ரெட் & கேட் பிக்சர்ஸ் தயாரிப்பில்  உலகநாதன் சந்திரசேகரன்  'குதூகலம்' என்ற படத்தை இயக்குகிறார். காக்கி சட்டை, எதிர்நீச்சல், கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ள உலகநாதன் சந்திரசேகரன் குதூகலம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாகப் பாலமுருகன் நடிக்கக் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். விஜய் டிவி புகழ் சஞ்சீவி, பியான் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 

ஒரு இளைஞன், தன் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதே இப்படத்தின் கதை. அதனுடன் திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும் பனியன் தொழிலின் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் இப்படம் உருவாக்கவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்