Skip to main content

"இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் போன்றவர் மணிகண்டன்" - இயக்குநர் பாலாஜி சக்திவேல்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

balaji sakthivel speech at good night thanks meet

 

குட் நைட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ''இயக்குநர் என்னை சந்தித்து முழு திரைக்கதையை வாசிக்க கொடுத்தார். தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாகவும், பின்னணி இசை ஊடாகவும், ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், படத்தை உருவாக்குவது தான் கடினம். இதனை இயக்குநர் விநாயக் எளிதாக கையாண்டிருக்கிறார். குறட்டை எனும் விசயத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரஞ்சித்தின் கோவத்தில் மிகப்பெரிய வலி இருக்கு” - பாலாஜி சக்திவேல்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
balaji sakthivel about pa ranjith

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பா.ரஞ்சித் மற்றும் பாலாஜி சக்திவேல் கலந்துகொண்டனர். அப்போது பாலாஜி சக்திவேல் திரைப்படவிழாவை தொடங்கி வைத்து பேசுகையில், “பா.ரஞ்சித் வருவதற்கு முன்னாடி இருந்த சினிமா வேறு. ஆனால் அவர் வருகைக்கு பிறகு மிகப்பெரிய அதிர்வை அவரது சினிமா ஏற்படுத்தியது. அத்தோடு மிகப்பெரிய தாக்கத்தோடு, கலாப்பூர்வமான பதிவுகளோடு, இந்திய சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அவர் இயக்குவதை தாண்டி தயாரிப்பாளராக மாறி அருமையான படங்களைக் கொடுத்து வருகிறார். 

அத்தோடு மட்டும் நிற்காமல் இதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என அவர் முன்னெடுத்தது அவருடைய நேர்மையை பரைசாற்றுகிறது. மேலும் ஒரு அரசியல் பதிவாக அவர் துவங்கிய நூலகம் மிக முக்கியமானது. எந்த இயக்குநருக்கும் தோன்றாத ஒரு விஷயம். எந்த பண நோக்கமும் இல்லாமல் சினிமாவில் சம்பாதிக்குற பணத்தை சினிமாவில் முதலீடு செய்கிறார். அதை எதிர்கால சந்ததியினருக்கு செய்கிறார். அவர் கோவக்காரர். ஆனால் அவருடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லவனுக்கு தான் கோவம் வரும். அந்தக் கோவத்துக்கு அர்த்தம் இருக்கு, மிகப்பெரிய வலி இருக்கு, அதை அவர் கதாபாத்திரம் மூலம் பேசுகிறார். மிகப்பெரிய ஆளுகளையும் கபாலி, காலா என சித்தரித்தது. இது எல்லாமே சாதரண விஷயமே கிடையாது” என்றார். 

Next Story

எதிர்பார்ப்பை உருவாக்கிய மத்தகம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Atharva , Manikandan Mathagam release date announced

 

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப் சீரிஸை, இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் ராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 

 

இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், அண்மையில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது வரை யூட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

 

இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் வெளியாகிறது.