Skip to main content

"நான் திமிராக கூறவில்லை" - சர்ச்சைக்கு விளக்கமளித்த அஷ்வின்

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

Aswin explained enna solla pogirai movie audio launch controversy speech

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வின், இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். குக் வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவேக் - மெர்வின் இசையமைக்க, இப்படத்தை ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

சமீபத்தில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய அஷ்வின், "நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கிவிடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை 'என்ன சொல்ல போகிறாய்'தான்” எனத் கூறியிருந்தார். இவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியதோடு, விவாதத்திற்கும் உள்ளானது.

 

ad

 

இந்நிலையில் நடிகர் அஷ்வின் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "நான் ஆணவமாகவும் திமிராகவும் பேசவில்லை. நான் கலந்துகொண்டதில் பெரிய நிகழ்ச்சி இதுதான். அதனால் மிகவும் பதற்றமாக இருந்தேன். 40  பேரிடம் கதை கேட்டதை எதார்த்தமாகத்தான் சொன்னேன். அதை திமிராகப் பேசியதாக எடுத்துக்கிட்டாங்க. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கூறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்