Skip to main content

தற்கொலை செய்து கொண்ட தேசிய விருது பெற்ற பிரபலம் - திரையுலகினர் அதிர்ச்சி

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

art director Nitin Desai passed away

 

பாலிவுட்டில் சலாம் பாம்பே, தேவ்தாஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். மேலும் தயாரிப்பு மேற்பார்வையாளராக லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். 

 

அதோடு 'ஹெலோ ஜெய் ஹிந்த்', 'அஜிந்தா' உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ள நிலையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் பணியாற்றிய சலாம் பாம்பே, லகான் உள்ளிட்ட படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. சிறந்த கலை இயக்குநராக 4 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். 

 

இந்நிலையில் மகாராஷ்டிரா, கர்ஜத் பகுதியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் இன்று காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் தெரிவிக்காத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

அவரது ஸ்டூடியோ சரியாக இயங்கவில்லை என்றும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் இறந்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தற்போது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.